உன்னைப் பிரிந்தவேளை
பரபரப்பான பட்டனத்துத் தெரு. எங்கு பார்த்தாலும் பரபரப்பு, நடந்து செல்லுவோர் ஒரு புறம் வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள். மறுபுறம் வாகனங்கள் மிக வேகமாய் பயனித்துக் கொண்டிருந்தன.
நகர்புறத்திற்கு அப்பால் நாலாம் தெருவில் இருந்து புறப்பட்டால் வர்ஷி. அலைபோல் கூந்தல் காற்றில் பறக்க, அளவாய் உதட்டுச் சாயம் தடவி, நீண்ட நெற்றியில் சிறிதாய் பொட்டு வைத்து, காதில் பெரிதாய் வளையம் கோர்த்து, கழுத்தோடு ஒட்டினாற் போல தங்க மாலை இட்டு, புதிதாய் வாங்கிய சுடிதாருள் புகுந்து வேகமாய் ஆட்டோவில் ஏறுகின்றாள். எங்கே இவ்வளவு அவசரமாய் போகின்றாள்? பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதே வேளை நகர்புறத்தின் மத்தியில் தனது தந்தையின் கரை தன் கார்போல ஓட்டிவந்து, ஓரமாய் நிறுத்திவிட்டு, பரபரப்பாய் விரலிடுக்கில் நுளைக்கின்றான் சிகரெட்டினை. வேகமாய் உள் இழுப்பதும் அதே வேகத்தில் புகையை வெளித்தள்ளுவதுமாய் தெருவை பார்த்துக்கொண்டு நின்றான் ரமேஸ். இவன் யாருக்காக காத்துநிற்கின்றான்? வர்ஷிக்காகவா?
மறுமுனையில் வந்து நிற்கிறது ஆட்டோ. அழகாய் தரையில் கால் பதிக்கின்றது தேவதை. அது வேறு யாருமல்ல வர்ஷி தான். ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்துவிட்டு வேகமாய் நுளைகின்றாள் எதிரே இருந்த அடுக்குமாடி கட்டிடத்தினுள். அதே சமயம் கையில் டொக்கிமென்டை எடுத்துக்கொண்டு ரமேஸ் உம் அதே கட்டிடத்தினுள் நுளைகின்றான்.
இருவரும் அங்கு வந்திருப்பது ஒரு நேர்முகப்பரீட்சைக்கே. இதுவரை அவர்கள் சந்தித்ததே இல்லை. வர்ஷி வேக வேகமாய் அருகே இருந்த தண்ணீர் போட்டளை எடுத்து மட மடவென தண்ணீரைப் பருகினாள். கண்கொட்டாமல் பார்த்தான் ரமேஸ்.
" கலோ... என்ன.... பொன்னுங்க என்ன பன்னினாலும் ஈ என்று பாப்பிங்களா..."
" நாங்க அப்பிடி இல்ல... என்னோட தண்ணீ பொட்டில என்னோட அனுமதி இல்லாம கூடிச்சா பாப்போம்...."
" ஓ ... இது உங்க போட்டிலா...? சாறி...."
" ம்... ஓகே... ஓகே...."
சிறிது நேர அமைதியின் பின்,
" என் பேரு வர்ஷி " கையினை நீட்டினாள் பதிலுக்கு ரமேசும் கை கொடுத்துவிட்டு போனுள் நுளைந்தான். அவன் நடவடிக்கையினை பார்த்து வெறுப்புடன் முகத்தை திருப்பிக்கொண்டாள். ஆனாலும் அவள் உள்ளே அனுமதிப்பதற்கு இன்னமும் நிறைய நேரம் இருக்கின்றது. எனவே மேலும் தொடர்ந்தாள்,
" கலோ... பதிலுக்கு உங்க பேர சொல்லமாட்டிங்களா?....."
" ஏன் நீங்க கேக்க மாட்டிங்களா"
" ம்.... சரி சொல்லுங்க...."
" ம்.. அப்பிடி கேலுங்க..ஐயம் ...ரமேஸ்"
என்றான் அப்படியே அவர்கள் பேச்சு தொடரும் நிலையில் வர்ஷி அழைக்கப்பட சரியாக இருந்தது. அவள் உள்ளே சென்று இன்றவியூவை முடித்துவிட்டு வெளியே வந்தாள்.
" வர்ஷி வெளிய வெயிட் பன்னுங்க வாரன்" என்று கூறிய ரமேசை சற்று கோபமாய் பார்த்துவிட்டு வெளியேறினாள் வர்ஷி.
ரமேஸ் இன்றவியூவை முடித்துவிட்டு வெளியே வந்தான். வர்ஷா தொலைபேசியில் பேசிக்கொண்டு நின்றாள். அருகே வந்த ரமேஸ்,
" என்ன எனக்குத்தானே வெயிட்டிங்"
என்றவனை கோபமாய் திரும்பிப் பார்த்துவிட்டு டென்சனாய் இருந்தாள். இதனை அவதானித்த ரமேஸ்
"என்னங்க என்ன பிரச்சன ? சொல்லுங்க முடிஞ்சா கெல்ப் பன்னுறன்"
"இல்லங்க என்னோட பிரன்ட் றுமா பூட்டிட்டு ஆவங்க றிலேசன் வீட்ட பொயிட்டா"
" அதுக்கென்னங்க நீங்க கதவ திறந்து போக வேண்டியது தானே"
" என்ன ஜோக்கா? என்னட்ட கீ இல்ல நா எடுத்து வரல்ல"
" ஓ... அப்பிடியா?..."
" ஓகே இவினிங் வரை என்னோட டைம் ஸ்பென்ட் பன்னுங்க அவங்க அதுக்குள்ள வந்திடுவாங்க தானே"
"என்ன யோசிக்கிறிங்க, நம்பிக்க இல்லன்ன வேணாம்"
" ம்... ஓகே.. போகலாம்"
என இருவரும் காரில் ஏறி பயனித்தனர். கடைகள், தியட்டர், ரெஸ்டோரன், என நேரத்தை போக்காட்ட சுற்றினார்கள். கூடவே அவர்களில் லொள்ளையும் சேர்த்துக் கொண்டனர். ஒரு நாள் பழகினாலும் நிறைவாய் உண்மையாய் பழகினார்கள். இருவருக்கும் இடையே நிறைய வாக்குவாதம் இருந்தாலும் இறுதியில் விட்டுக் கொடுப்புதான் யெயித்தது. இவ்வாறே மாலையும் நெருங்கியது. பிரியும் நேரம் வந்தது கூடவே சோகமும் வந்தது. அவர்களிற்கு இடையே முதலில் எதுவும் இல்லை தான் ஆனாலும் அந்த நிமிடத்தின் பிரிவு துயரை கொடுத்தது. ஏன் ...... சில நாட்களின் பின்னரும் நினைவுகள் சுமையான போதுதான் தேடல் காதலாய் பதில் சொன்னது. முகவரிகள் சொல்லிக்கொள்ளாமல், தொலைபேசி இலக்கம் தெரியாமல் பிரிந்தவர்கள் மனதில் காதல் வந்தால் என்ன செய்வது.
ரமேஸ் முடிந்தவரை வர்ஷியை தேடினான் கிடைக்கவில்லை. பலகாலம் உருண்டோடியது ஒருநாள் அவன் நன்பனுடம் படம்பார்க போக என அவன் அலுவலத்திற்கு அவனை அழைப்பதற்காய் சென்றான். என்ன ஆச்சரியம் எதிரே தென்பட்டாள் வர்ஷா. இதயங்கள் பேசிக்கொள்ள காதல் உணர்வுக் பரிமாறிக் கொண்டது.
முற்றும்.

"உண்மை அன்பு எப்போதும் தோற்றதில்லை அதனால் அப்போது காதல் புனிதமாய் உணரப்பட்டது. இப்போது எவையும் உண்மையில்லை அதனால் புனிதமும் இல்லை"
முற்றும்.