துளிர்க்காத அரும்பு


அதிகாலை அவசர அவசரமாய் புறப்படுகின்றான் பரதன். மனைவி அரைகுறை நித்திரையில் எழுந்தவள் போல் தேனீரை நீட்ட, வேகமாய் தொண்டைக்குழிக்குள் இறக்குகின்றான். பையை கையில் எடுத்துக் கொண்டே....

     " ரஞ்சி... நான் பொயிற்று வாரன்... வெளிய போகும் போது மறக்காம கதவ பூட்டிட்டு போ... ஆ... பிள்ளைக்கு மறக்காம அந்த டொனிக்க குடு.....  "
   
 " சரி சரிங்க நான் பாத்துக்கிறன் நீங்க பொயிற்று வாங்க .... பஸ் போக போகுதுங்க..." 

உன்னை பிரிந்தவேளை

பரபரப்பான பட்டனத்து தெரு. எங்கு பார்த்தாலும் பரபரப்பு, நடந்து செல்லுவோர் ஒரு புறம் வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள். மறுபுறம் வாகனங்கள் மிக வேகமாய் பயனித்துக் கொண்டிருந்தன. 



 நகர்புறத்திற்கு அப்பால் நாலாம் தெருவில் இருந்து புறப்பட்டால் வர்ஷி. அலைபோல் கூந்தல் காற்றில் பறக்க, அளவாய் உதட்டுச் சாயம் தடவி, நீண்ட நெற்றியில் சிறிதாய் பொட்டு வைத்து, காதில் பெரிதாய் வளையம் கோர்த்து, கழுத்தோடு ஒட்டினாற் போல தங்க மாலை இட்டு, புதிதாய் வாங்கிய சுடிதாருள் புகுந்து வேகமாய் ஆட்டோவில் ஏறுகின்றாள்.
(தொடரும்)

மேலும் படிக்க

கறுப்புக்கனவு

பொழுது சாயும் நேரம் வானம் கறுத்து இருள் மெது மெதுவாய் சூழத்தொடங்கியது.  கொஞ்சம் இருட்டி விட்டாலே முழுதாய் இருள் கவிந்துவிடும் கிராமம் அது. 





வாழை, மா, பலா என முக்கனிகளும் நன்கு விளையும் பூமி அது. விவசாயம் செய்யாத மனிதர்களே அந்தக்கிராமத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பயிர்கள் நிறைந்து வழியும்.  பச்சை வயலும் வரப்போடு பாயும் தண்ணீரும் ஆகா எத்தனை இன்பம். பாதங்கள் வரப்போடு நடந்தாலும் நினைவுகளும் மனதும் வயலின் வாசனையைதான் நுகரும்
(தொடரும்)

மேலும் படிக்க